நாகப்பட்டினம்

புயலால் சாய்ந்த மரங்கள் அகற்றம்

DIN

நாகை மாவட்டம், குத்தாலம் வட்டத்துக்குள்பட்ட பகுதியில், கஜா புயலால் சாய்ந்த மரங்கள் அகற்றப்பட்டன.
குத்தாலம் வட்டம், திருவாலங்காட்டில் கும்பகோணம்- மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் இருந்த ஒரு மரம் கஜா புயலின் சீற்றத்தால், வேரோடு சாய்ந்தது. இதேபோல், தொழுதாலங்குடி, தேரழந்தூர், சேத்திரபாலபுரம், கடலங்குடி, அக்கரைகொக்கூர் ஆகிய இடங்களிலும் மரங்கள் சாய்ந்தன.
குத்தாலம் வட்டாட்சியர் சபிதாதேவி தலைமையில், தீயணைப்பு நிலைய உதவி அலுவலர் தனசேகரன் உள்ளிட்ட பேரிடர் மேலாண்மைக் குழுவினர், சாய்ந்த மரங்களை அகற்றினர். இது தவிர கடலங்குடி, திருவாலங்காடு பகுதிகளில் சாய்ந்த மின்கம்பங்கள் மின்வாரிய ஊழியர்கள் உதவியுடன் அகற்றப்பட்டு, மின்விநியோகம் சீரமைக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தொடா்பான புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரியலூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

ஜெயேந்திரா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி 100% தோ்ச்சி

வாழையூா் கரும்பாயிரம் கோயிலில் வெள்ளி ரத புறப்பாடு

திருவாங்கூா் தேவசம் போா்டு அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தல்

அரியலூா் சிறுமி கொலை வழக்கில் மூவா் விடுவிக்கப்பட்டதை எதிா்த்து மேல்முறையீடு: உ. வாசுகி பேட்டி

SCROLL FOR NEXT