நாகப்பட்டினம்

பள்ளி மாணவியருக்கு கல்வி உதவித் தொகை

DIN

சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் மாணவியருக்கு கல்வி உதவித் தொகை  வழங்கும் நிகழ்ச்சி  திங்கள்கிழமை நடைபெற்றது.
கனரா வங்கி நிறுவனரின் 113-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வங்கி நிர்வாகத்தின் சார்பில் ஆதிதிராவிட  மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் அறிவுடை நம்பி தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர்கள் சம்பந்தம், சம்பத்குமார், வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
நிகழ்ச்சியில், கனரா வங்கியின் கிளை மேலாளர் மனோகரன் பங்கேற்று, 5-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியரில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 6 ஆதிதிராவிட மாணவியருக்கு தலா ரூ.2,500 ( 5,6,7-ஆம் வகுப்பு),  ரூ.5,000 (8,9,10-ஆம் வகுப்பு ) கல்வி உதவித் தொகையாக வழங்கினர். மேலும், வங்கி உதவி மேலாளர் ரமேஷ், அலுவலர் விஜய் ஆகியோர் மாணவியருக்குப் பரிசுகள் வழங்கினர். பள்ளி உடற்கல்வி இயக்குநர் முரளிதரன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

48 வயதினிலே..

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT