நாகப்பட்டினம்

நாகையிலிருந்து 7 புதிய பேருந்துகளின் இயக்கம் தொடக்கம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்

DIN

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் நாகை புதிய  பேருந்து நிலையத்திலிருந்து 7 புதிய பேருந்துகளின் இயக்கத்தை அமைச்சர் ஓ.எஸ். மணியன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கங்களுக்கு 471புதிய பேருந்துகள் அண்மையில் ஒதுக்கீடு செய்யப்பட்டன. கும்பகோணம் போக்குவரத்துக்கழகத்துக்கு 111 புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதில், வேளாங்கண்ணி - ஈரோடு, நாகை - சிதம்பரம், காரைக்கால் - புதுச்சேரி, காரைக்கால் - திருச்சி, சிதம்பரம் - பழனி, வேதாரண்யம் - திருப்பூர், வேதாரண்யம் - சேலம் ஆகிய வழித்தடங்களில் 7 புதிய பேருந்துகளின் இயக்கம் தொடக்க நிகழ்ச்சி, நாகை புதிய பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன், கொடியசைத்து புதிய பேருந்துகளின் இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் வ. முருகேசன் தலைமை வகித்தார்.  நாகை மக்களவை  தொகுதி உறுப்பினர் ஆர்.கே. பாரதிமோகன், நாகை சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் எம். தமிமுன் அன்சாரி,  அரசு போக்குவரத்துக்கழகப் பொது மேலாளர் தசரதன், துணை மேலாளர் (வணிகம்) ராஜா,  துணை மேலாளர் (தொழில்நுட்பம்) சிதம்பரகுமார், கிளை மேலாளர் சுரேஷ், கூட்டுறவு சங்க நிர்வாகி தங்க. கதிரவன் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் கலந்து
கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT