தமிழ்நாடு கலை, இலக்கிய பெருமன்றக் கூட்டம்
நாகை மாவட்டம், சீர்காழியில் தமிழ்நாடு கலை, இலக்கியப் பெருமன்றக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்டம், சீர்காழியில் தமிழ்நாடு கலை, இலக்கியப் பெருமன்றக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு வட்டத் தலைவர் செம்மலர் வீரசேனன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் சுந்தரய்யா, மாவட்ட துணைச் செயலாளர் தங்க. சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தீர்மானங்கள்: நூலகத் தந்தை சீர்காழி எஸ்.ஆர். அரங்கநாதனின் நினைவாக சீர்காழியில் கிளை நூலகம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் மற்றும் கருத்துரிமை, மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான மத்திய, மாநில அரசுகளின் அடக்குமுறையை பெருமன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வட்டாரப் பொருளாளர் துரைமுருகன் வரவேற்றார். பிரபாகரன் நன்றி கூறினார்.