நாகப்பட்டினம்

கிராமசபைக் கூட்டம்

DIN


சீர்காழி அருகேயுள்ள புளியந்துறை கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் 2017-18 ஆம் ஆண்டில் நடைபெற்ற பணிகள் மற்றும் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதிகள் குறித்து சமூகத் தணிக்கை சிறப்பு கிராமசபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு கௌரவத் தலைவர் வீரமணி தலைமை வகித்தார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பந்தம் முன்னிலை வகித்தார். சமூகத் தணிக்கை அலுவலர் பாலமுருகன் 2017-18 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட பணிகள் குறித்து அறிக்கை வாசித்தார். மேலும், நிறைவேற்றப்பட்ட பணிகள் மற்றும் ஒதுக்கீடு செய்யப்பட நிதி குறித்த விவரங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. பணி மேற்பார்வையாளர் வேல்கண்ணன் மற்றும் அலுவலர்கள், திட்டப்பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராலிமலையில் ஒன்றரை கோடியை தாண்டிய ஆடு வர்த்தகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

காங்கிரஸ் மாவட்ட தலைவா் மா்ம மரணம்: வெளியானது 2ஆவது கடிதம்

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

SCROLL FOR NEXT