நாகப்பட்டினம்

எண்ணெய் கடையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஆய்வு

DIN

நாகப்பட்டினத்தில்  எண்ணெய் மற்றும் வெண்ணெய் உற்பத்தி செய்யும் கடைகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். 
நாகையில், கலப்படம்  செய்யப்பட்ட ஆயில் மற்றும் வெண்ணெய் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் உணவுப் பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, நாகை உணவுப் பாதுகாப்பு துறை அலுவலர் ஏ.டி. அன்பழகன் மற்றும் அலுவலர்கள் நாகை முக்கிய கடைவீதிகளில் உள்ள ஆயில்  ஸ்டோர்கள், வெண்ணெய் உற்பத்தி செய்யும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது, கடை உரிமையாளர்களிடம் உணவுப் பாதுகாப்பு  தர நிர்ணய சட்டத்தைப்பின் பற்றி உணவுப் பொருள்களை விற்பனை செய்யவேண்டும் என அறிவுறுத்தினர். தொடர்ந்து, நகரில் உள்ள தேநீர் மற்றும் பலகார கடைகளில் ஆய்வு செய்ததுடன், உணவுப் பாதுகாப்புத்  துறை அறிவுறுத்தல்களை கடைப்பிடிப்பவர்களுக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் நாயகி மீனாட்சி சவுத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

SCROLL FOR NEXT