நாகப்பட்டினம்

சாகுபடிக்குத் தண்ணீர் கோரி வீடுகளில் கருப்புக் கொடி 

DIN

கருகும் சம்பா நெல் பயிர்களைக் காப்பாற்ற, தண்ணீர் திறக்கக் கோரி நாகையை அடுத்த பாலையூரில் விவசாயிகள் தங்கள் வீடுகளில் திங்கள்கிழமை கருப்புக் கொடிகளைக் கட்டினர்.
மேட்டூர் அணை பாசனத்துக்காக திறக்கப்பட்டு 2 மாதங்களுக்கு மேலாகியும், காவிரி கடைமடை மாவட்டமான நாகை மாவட்டத்தின் பல பகுதிகளை ஆற்றுப் பாசனம் வந்தடையவில்லை. பெயரளவுக்கு ஆறுகளில் திறக்கப்பட்ட தண்ணீர், சில பகுதிகளில் வாய்க்காலை மட்டுமே எட்டியது. வாய்க்காலை எட்டிய தண்ணீர் வயல்களை எட்டவில்லை. 
ஒரு சில வாய்க்கால்களில் ஓரிரு நாள்களிலே தண்ணீர் வந்தச் சுவடு தெரியாமல் வறண்டு போனது.  இதனால், ஆற்றுப் பாசனத்தை நம்பி நேரடி விதைப்பு மற்றும் நடவுப் பணிகளைத் தொடங்கிய விவசாயிகள் தற்போது செய்வதறியாத நிலைக்கு உள்ளாகியுள்ளனர். 
இதனால், நிலத்தடி நீர் வளம் இல்லாத வெண்ணாறு வடிநிலக் கோட்டத்துக்குள்பட்ட நாகை கடைமடை பகுதிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.  வெட்டாற்றிலிருந்து பிரியும் தேவநதி மூலம் பாசனம் பெறும், நாகையை அடுத்த பாலையூர், செல்லூர், தெத்தி, பெருங்கடம்பனூர், அழிஞ்சமங்கலம் உள்பட சுமார் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 20 ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் பரப்பில் தொடங்கப்பட்ட சம்பா நெல் சாகுபடி தற்போது கடுமையான வறட்சியை எதிர்கொண்டுள்ளன.  சில பகுதிகளில் விளை நிலங்களிலேயே, நெல் பயிர்கள் கருகும் நிலையை அடைந்துள்ளன.
நிலத்தடி நீர் வளம் இல்லாத இப்பகுதிகளில் ஆற்றுப் பாசனம் மட்டுமே வேளாண்மையைக் காப்பாற்றும் என்ற நிலையில், ஆற்றுப் பாசனத்தை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகமும், பொதுப் பணித் துறையும் போதுமான முனைப்புக் காட்டவில்லை எனக் கூறி, கருகும் நெல் பயிர்களைக் காப்பாற்ற தண்ணீர் திறக்கக் கோரி பாலையூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் வீடுகளில் திங்கள்கிழமை கருப்புக் கொடிகளைக் கட்டினர்.  பாலையூரில் சுமார் 150-க்கும் அதிகமான வீடுகளில் கருப்புக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT