நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் குருத்தோலை பவனி

DIN


நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில், கிறிஸ்தவர்களின் தவக்கால நிகழ்வுகளில் ஒன்றான குருத்தோலை பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இயேசு கிறிஸ்து உயிர் நீத்த நாள் புனித வெள்ளி என்றும், மீண்டும் உயிர்த்தெழுந்த 3-ஆம் நாளை ஈஸ்டர் திருநாளாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர். 
இயேசு கிறிஸ்து  உயிர்த்தெழுந்த நாளை நினைவுகூரும் வகையில், தவக்காலம் கடைப்பிடிக்கப் படுகிறது.  சாம்பல் புதனில் தொடங்கும் இந்த தவக்காலத்தின் கடைசி வாரம் ஈஸ்டர் புனித வாரமாகவும், இதன் தொடக்க நாளே குருத்தோலை ஞாயிறு எனவும் அழைக்கப்படுகிறது. இந்நிகழ்வை முன்னிட்டு, வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில், ஈஸ்டர் பண்டிகை ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதன்படி நிகழாண்டில், மார்ச் 6-ஆம் தேதி சாம்பல் புதனுடன் ஈஸ்டர் பண்டிகையின் தவக்கால நிகழ்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. வெள்ளிக்கிழமைகளில் சிலுவைப் பாதை நிறைவேற்றும் நிகழ்ச்சி மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. தவக்கால நிகழ்வுகளில் ஒன்றாகவும், பாஸ்கா விழாவுக்குச் சென்ற இயேசு கிறிஸ்துவுக்கு மக்கள் குருத்தோலைகளை ஏந்தி நின்று, வாழ்த்து கூறிய நிகழ்வை நினைவுகூர்ந்தும் கொண்டாடப் படும்குருத்தோலை ஞாயிறு பவனி வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்றது. இதையொட்டி, சிறப்பு திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன.
பேராலய அதிபர் ஏ.எம்.ஏ. பிரபாகர் முன்னிலையில், பேராலயத்தில் தொடங்கிய குருத்தோலை பவனி, வாழ்த்து முழக்கங்களுடன் பேராலயத்தைச் சுற்றியுள்ள பிரதான வீதிகள் வழியாகச் சென்று, பேராலய கீழ்க்கோயிலை அடைந்தது. இந்நிகழ்ச்சியில், பங்குத் தந்தையர்கள், பங்கு மக்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்துஸ்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT