நாகப்பட்டினம்

மின்னல் தாக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்

DIN


வேதாரண்யம் அருகே இடி மின்னல் தாக்கி பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம். செல்வராசு சனிக்கிழமை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். 
ஆயக்காரன்புலம் 2 ஆம் சேத்தி, செட்டியாக்குத்தகை பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட மழைப் பொழிவின்போது இடி மின்னல் தாக்கி 14 பேர் பாதிக்கப்பட்டு, வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றனர். இதில் 12 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றனர். இருவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில், சனிக்கிழமை நாகை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம். செல்வராசு பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார். அவருடன், முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் ஆர். துரைராசு, சிவகுரு.பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

+2 தேர்வில் அசத்திய நாங்குனேரி மாணவர் சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

SCROLL FOR NEXT