நாகப்பட்டினம்

கோடைகால  கலைப் பயிற்சியில் சேர அழைப்பு

DIN

மாவட்ட அரசு இசைப் பள்ளியில் நடைபெறவுள்ள கோடைகால  கலைப் பயிற்சியில் விருப்பமுள்ள சிறார் சேரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கலைப் பண்பாட்டுத் துறை இணை இயக்குநர் இரா. குணசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டுத் துறை, மண்டலக் கலைப் பண்பாட்டு மையம் ஆகியவை இணைந்து, மாவட்ட ஜவாஹர் சிறுவர் மன்றங்கள் மூலம் 5 வயது முதல் 16 வயது வரையுள்ள சிறாருக்கு குரலிசை, பரத நாட்டியம், ஓவியம், யோகா மற்றும் கராத்தே, சிலம்பம் போன்ற கலைப் பயிற்சிகளை  சனிக்கிழமை  மாலை 3 மணி முதல் 6 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் 12 மணி வரை, சீர்காழி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் அளித்துவருகிறது. இந்நிலையில், 2019-2020-ஆம் ஆண்டில் கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்க சிறாருக்கு ஒவ்வொரு மாவட்ட ஜவாஹர் சிறுவர் மன்றங்களில் குரலிசை, பரத நாட்டியம், யோகா, ஓவியம் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. இப்பயிற்சி முகாம் 1.5.2019 முதல் 10.5.2019 வரை காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி முகாமில் கலந்துகொள்ளும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் சான்றிதழ்கள் முகாம் நிறைவு நாளில் வழங்கப்படும். 
இப்பயிற்சியில் சேர விருப்பமுள்ள சிறார், சீர்காழியில் இயங்கிவரும் மாவட்ட அரசு இசைப்பள்ளிக்கு மே 1- ஆம் தேதி காலை 9 மணிக்கு நேரில் வந்து கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT