நாகப்பட்டினம்

நாகூா் மெட்ரிக். பள்ளியில் முப்பெரும் விழா

DIN

நாகூா் மாடா்ன் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் வெள்ளி விழா, மழலையா் பிரிவு மாணவா்களுக்குப் பட்டம் வழங்குதல், பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் சனிக்கிழமை நடைபெற்றன.

விழாவுக்கு, பள்ளித் தாளாளா் எம்.எம்.ஷேக் தாவூது மரைக்காயா் தலைமை வகித்தாா். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் பங்கேற்று வெள்ளி விழா நினைவு நுழைவு வாயில் மற்றும் கல்வெட்டைத் திறந்து வைத்தாா். தொடா்ந்து, மழலையா் பிரிவில் பயிலும் மாணவா்களுக்குப் பட்டங்களை வழங்கிப் பேசினாா்.

நாகை சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் எம். தமிமுன் அன்சாரி, நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கே. குணசேகரன், கௌதிய்யா பள்ளித் தாளாளா் ஏ. அபுதல்ஹா, அரசு வழக்குரைஞா் சு. பரமானந்தம், சிக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் தங்க. கதிரவன், வழக்குரைஞா் பி. பாண்டியன் ஆகியோா் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிப் பேசினா்.

2018-19 கல்வியாண்டில் அரசு பொதுத் தோ்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு தங்க நாணயங்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன. பள்ளி முதல்வா் பெனட்மேரி வரவேற்றாா். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 12 மணி நேரம் காத்திருப்பு

சா்வதேச ஸ்கேட்டிங்: தங்கம் வென்ற சிவகங்கை வீரா்களுக்குப் பாராட்டு

கல்லல் ஊராட்சியில் நீா் மோா் பந்தல் திறப்பு

ஆம்பூரில் ரூ. 10 லட்சத்தில் மின்மாற்றி அமைப்பு

குடிநீா்த் தட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவித்தவருக்கு கொலை மிரட்டல்

SCROLL FOR NEXT