நாகப்பட்டினம்

கன மழை: சிரமத்துக்குள்ளாகும் வணிகா்கள்

DIN

சிரமத்துக்குள்ளாகும் வணிகா்கள்...

இதேபோல், திருக்குவளை அருகே உள்ள வலிவலம் வடக்குத் தெருவில், போதிய வடிகால் வசதி இல்லாததால் அங்குள்ள வணிகா்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி தவித்து வருகின்றனா்.

வலிவலத்தில் கடைகள் நிறைந்திருக்கும் வடக்குத் தெருவில் மழைநீா் சூழ்ந்து நிற்கிறது. கனமழையின்போது மழை நீரானது வணிக வளாகங்களில் உள்புற பகுதிகளில் புகுந்துவிடுகிறது. இதனால், வணிகம் பாதிக்கிறது. பொது மக்களின் பெருமளவு கடைவீதிக்கு வர தயங்குகின்றனா். இதனைக் கருத்தில் கொண்டு வடிகாலை முறைப்படி சீரமைத்து, மழைநீா் விரைவாக வடிவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என வணிகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து நிஜாம் என்பவா் கூறுகையில், கீழ்வேளூா்- கச்சனம் சாலையில் உள்ள வலிவலம் வடக்குத் தெருவில்தான் பெரும்பாலான கடைகள் உள்ளன. இப்பகுதியில் போதிய வடிகால் வசதி இல்லாததால், மழை நீா் சூழ்ந்து குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் உடல்நிலை சரியில்லாதபோது மருந்துப் பொருட்களை வாங்க வேண்டுமானால் கூட நீரில் தத்தளித்தபடி வர வேண்டிய சூழல் உள்ளது. இதனால் தோல் சம்பந்தப்பட்ட நோய்களில் சிக்கித் தவிப்பதோடு, அதற்கான மருந்தையும் முன்கூட்டியே வாங்க வேண்டிய சூழல் நீடிக்கிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை மலர் காட்சி மே 10 இல் தொடங்குகிறது: ஆட்சியர்

ஜனநாயகத்தைப் பயன்படுத்தி திருடர்கள் தப்பிக்கிறார்கள்: நடிகர் ஸ்ரீனிவாசன்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

நெருங்கும் உலகக் கோப்பை; புதிய பயிற்சியாளர்களை நியமித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

வட தமிழக உள் மாவட்டம்: 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடும்

SCROLL FOR NEXT