நாகப்பட்டினம்

சகோதரர்களுக்கிடையே தகராறு: நெல் வயல் தீயிட்டு கொளுத்தி சேதம்

DIN

திருக்குவளை அருகேயுள்ள வலிவலத்தில் சகோதரர்களுக்கிடையேயான தகராறில் நெல்வயல் தீயிட்டு  கொளுத்தி சேதப்படுத்தப்பட்டது. 
கொடியாலத்தூர் வடக்குத் தெருவை சேர்ந்தவர் ஆதியப்பன் மகன் சோமசுந்தரம். இவரது சகோதரர் சுவாமிநாதன் மனைவி லதாவுடன் திருவாரூர் பாத்திமா காலனியில் வசித்து வருகிறார். இவருக்குச் சொந்தமான நிலம் வலிவலம் சர்வோதயம் விடுதி அருகில் உள்ளது. இவர் தற்பொழுது சம்பா சாகுபடி செய்து அறுவடை செய்த நெல்லை ஈரப்பதம் காய்வதற்காக ( அறிகாய்ச்சலுக்காக ) தனது வயலில் காய வைத்துள்ளார். இந்நிலையில், சகோதரர்களுக்குள் குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், சோமசுந்தரம் சுவாமிநாதனை பழிவாங்கும் நோக்கில் அவரது வயலில் பரப்பியிருந்த நெற்பயிரை தீயிட்டு கொளுத்தியதாக கூறப்படுகிறது. நெல்வயல் தீப்பிடித்து எரிவதை பார்த்த அப்பகுதி மக்கள் விரைந்து தீ அருகில் உள்ள வீடுகளுக்கும் கடைகளுக்கும் பரவாமல் தடுத்து அணைத்தனர். 
இதுகுறித்து, சுவாமிநாதன், வலிவலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், சார்பு ஆய்வாளர் வி.கே. குமார், தனிப்படை காவலர் கா. ரமேஷ்குமார் ஆகியோர் வழக்குப் பதிந்து சோமசுந்தரத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

SCROLL FOR NEXT