நாகப்பட்டினம்

மடிக்கணினி கோரி மாணவர் சங்கம் போராட்டம்

DIN

கடந்த 2017-2018 மற்றும் 2018-2019- ஆம் கல்வி ஆண்டுகளில் பள்ளிக் கல்வியை நிறைவு செய்த மாணவர்களுக்கு உடனடியாக மடிக்கணினி வழங்கக் கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் நாகை மாவட்டம், கீழ்வேளூரில் மனு அளிக்கும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
2017- 2018  மற்றும் 2018- 2019 -ஆம் கல்வி ஆண்டுகளில் பள்ளிக் கல்வியை நிறைவு செய்த மாணவர்களுக்கு இதுவரை விலையில்லா மடிக்கணினி வழங்கப்படாததைக் கண்டித்தும், இந்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் தேதியைக் குறிப்பிட்டு ஒரு வார காலத்துக்குள் பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியிடக் கோரியும் இந்திய மாணவர் சங்க நாகை மாவட்ட நிர்வாகிகள், கீழ்வேளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனுக்கள் அளித்தனர். முன்னதாக, கீழ்வேளூர் கடைவீதியிலிருந்து வட்டாட்சியர் அலுவலகம் வரை அவர்கள் பேரணியாகச் சென்றனர். மாணவர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் அன்பு ஸ்ரீதர் தலைமை வகித்தார். அமைப்பின் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் குணசீலன், கார்த்திக், பர்கான், நிஜி மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கல்லூரி மாணவர்கள் மனு...
இதேபோல், 2017-2018-ஆம் ஆண்டில் பள்ளிக் கல்வியை நிறைவு செய்த  மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கக் கோரி நாகை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் கல்லூரி மாணவர்கள் மனு
அளித்தனர்.
நாகையில் உள்ள ஒரு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் 2017-2018-ஆம் கல்வி ஆண்டில் பயின்று, பள்ளிக் கல்வியை நிறைவு செய்து, தற்போது பல்வேறு கல்லூரிகளில் பயின்று வரும் தங்களுக்கு இதுவரை மடிக்கணினி வழங்கப்படவில்லை எனவும், ஏற்கெனவே செய்யப்பட்ட ஒதுக்கீடுப்படி தங்களுக்கு மடிக்கணினி வழங்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT