நாகப்பட்டினம்

புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா தொடக்கம்

DIN

நாகையில் உள்ள புனித அந்தோணியார்ஆலயத் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றுத்துடன் தொடங்கியது.
நாகை புனித அந்தோணியார்ஆலயத்தில் ஆண்டுதோறும் ஊரார் உபய பெருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டில் இவ்விழா ஜூன் 11-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இவ்விழாவின் தொடக்க நிகழ்ச்சியான திருக்கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு திருப்பலிகள், கொடி ஊர்வலம், அந்தோணியார் சொரூபம் தாங்கிய தேர் பவனி நடைபெற்றன. 
மாலை 6.30 மணிக்கு தொடங்கிய திருக்கொடி ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக இரவு 7.30 மணியளவில்ஆலயத்தை வந்தடைந்தது. பின்னர், திருப்பலி நடத்தப்பட்டு, கொடியேற்றம் செய்யப்பட்டது. 
பங்குத் தந்தை வின்செண்ட் தேவராஜ் திருப்பலிகளை நிறைவேற்றினார். உதவி பங்குத் தந்தை விட்டல் பிரசாத் மற்றும் உபயதாரர்கள் இறைமக்கள் கலந்து  கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT