நாகப்பட்டினம்

ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிக்கு பாதுகாப்பு: போலீஸாரைத் தாக்கிய 7 பேர்கைது

DIN

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியின்போது பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவலர் தாக்கப்பட்டார். இதுதொடர்பாக, 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
மயிலாடுதுறை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி கடந்த ஜூன் 12  தொடங்கி  நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக, மயிலாடுதுறை சின்னக்கடைத் தெரு, தரங்கம்பாடி சாலை, மாயூரநாதர் பெரிய கோயில் பகுதி, திருமஞ்சனவீதி, வண்டிக்காரத் தெரு ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. 
அப்போது, மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் டில்லிபாபு தலைமையில் 25-க்கும் மேற்பட்ட போலீஸார்  பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். வண்டிக்காரத் தெருவில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த தரைக் கடைகள், தள்ளுவண்டிகள் நகராட்சி ஊழியர்களால் அப்புறப்படுத்தப்பட்டன. இதற்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் துரைக்கண்ணு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் கணேசன், ஒன்றியச் செயலாளர் மேகநாதன், சிவராமன், ரஞ்சித் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
இதனால், அவர்களை போலீஸார் அப்புறப்படுத்த முயன்றபோது, தமிழ்நாடு சிறப்பு பாதுகாப்புப் படை காவலர் மணிகண்டன் என்பவர் தராசு எடைக் கல்லால் தாக்கப்பட்டார். இதில் காயமடைந்த அவரை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளித்தனர்.
இது தொடர்பாக, மயிலாடுதுறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சிஐடியு மாவட்டச் செயலாளர் துரைக்கண்ணு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் கணேசன், ஒன்றியச் செயலாளர் மேகநாதன் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து சங்ககாரா கூறியது என்ன?

மெட் காலாவில் சஹீரா!

விழுப்புரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழப்பு!

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

மருமகன் ஆகாஷ் ஆனந்த் தனது அரசியல் வாரிசு கிடையாது: மாயாவதி அறிவிப்பு

SCROLL FOR NEXT