நாகப்பட்டினம்

குடிநீர் தட்டுப்பாடு இல்லை: அமைச்சர் ஓ.எஸ். மணியன்

DIN


தட்டுப்பாடு காரணமாக, குடிநீர் வழங்கப்படவில்லை என்பது தவறு என்று தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்தார்.
நாகை மாவட்டம், கீழ்வேளூரில் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி : 
தமிழக அரசின் குடிமராமத்துப் பணிகள் மூலம், தமிழகத்தில் உள்ள குளங்கள், வாய்க்கால்கள் உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளும் தூர் வாரி, ஆழப்படுத்தப்பட்டு, கரைகள் உயர்த்தப்பட்டதால், கடும் கோடையிலும் குளங்களில் தண்ணீர் உள்ளது. இது,  மக்களின் வெளிப்பயன்பாட்டுக்கும், கால்நடைகளுக்கும் பெரும் பயனளிக்கிறது. வளம் குறைந்திருப்பதால், நாகை மாவட்டத்தில் குடிநீர் திட்டம் மூலம் நிமிடத்துக்கு 29 ஆயிரம் லிட்டர் வீதம் எடுக்கப்பட்ட தண்ணீர் அளவு தற்போது 19 ஆயிரம் லிட்டராகக் குறைந்துள்ளது. இதனால், மக்களுக்கு வழக்கமான அளவில் குடிநீர் விநியோகம் செய்ய முடியவில்லை. இருப்பினும், தேவையான அளவு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. எனவே, குடிநீர் வழங்கப்படவில்லை என்பது 
தவறான குற்றச்சாட்டு என்றார் ஓ.எஸ். மணியன்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT