நாகப்பட்டினம்

தமாகா நகரத் தலைவர் நியமனம்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சீர்காழி நகரத் தலைவராக எம். தம்பிதுரை செவ்வாய்க்கிழமை  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

DIN

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சீர்காழி நகரத் தலைவராக எம். தம்பிதுரை செவ்வாய்க்கிழமை  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சீர்காழி தமாகா நகரத் தலைவராக இருந்த கணிவண்ணன் அக்கட்சியிலிருந்து விலகி, காங்கிரஸில் இணைந்தார். இதைத்தொடர்ந்து, தமாகா மாநிலத் தலைவர் ஜி.கே.வாசன் பரிந்துரையின்பேரில், சீர்காழி நகரத் தலைவராக எம். தம்பிதுரையை நாகை மாவட்டத் தலைவர் பூம்புகார் எம். சங்கர் நியமனம் செய்தார்.
இந்நிலையில், தம்பிதுரை தலைமையில் சீர்காழி நகர செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. மாவட்ட இளைஞரணி தலைவர் வரதராஜன், வட்டார தலைவர்கள் பண்டரிநாதன், சுந்தரவடிவேல், நடராஜ், சின்னமரைக்காயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பொறுப்பாளர்கள் அம்பேத், சுரேஷ், லோகநாதன், மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 5.2 ஆகப் பதிவு!

ஆத்தூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் திரளானோர் வழிபாடு!

லிஃப்ட் கேட்டவரை எரித்துக் கொன்று நாடகமாடியவர்! பெண் தோழியால் சிக்கியது எப்படி?

2026 ஐபிஎல் எப்போது? ஏலத்துக்கு முன்பே வெளியான நற்செய்தி!

தூத்துக்குடி முதல் சென்னை வரை.. கடலோர மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்!

SCROLL FOR NEXT