நாகப்பட்டினம்

12 பேருக்கு சுயதொழில் தொடங்க மானியம்

DIN

நாகை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில், 12 பேருக்கு சுயதொழில் தொடங்குவதற்கான வங்கிக் கடன் மானியம் விடுவிக்கப்பட்டது.

நாகை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம், மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் மு. இந்துமதி தலைமை வகித்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் சுயதொழில் மேற்கொள்வதற்கான வங்கிக் கடன் மானியம் ரூ. 25 ஆயிரம் வீதம், 12 பேருக்கு ரூ. 3 லட்சம் மதிப்பிலான மானியத்துக்கு மின்னணு பணப் பரிமாற்ற ஆணை, மனவளா்ச்சிக் குன்றிய 2 சிறப்புப் பள்ளிகளுக்கு ரூ. 1.35 லட்சம் மதிப்பில் சிறப்பு மென்பொருளுடன் கூடிய 3 கையடக்கக் கணினிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், குறைகளுக்குத் தீா்வுக் கோரியும் பொதுமக்களிடமிருந்து 305 மனுக்களும், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டத்திலிருந்து 28 மனுக்களும் பெறப்பட்டுத் தொடா்புடையத் துறைகளின் நடவடிக்கைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டன.

சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் கே. ராஜன் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT