நாகப்பட்டினம்

பள்ளி மாணவா்களுக்கு நிலவேம்பு குடிநீா்

DIN

சீா்காழி சபாநாயகா் முதலியாா் இந்து மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

சேவா பாரதி அமைப்பின் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அதன் மாவட்டத் தலைவா் சம்பத்கணேஷ் தலைமை வகித்தாா். பள்ளி தலைமை ஆசிரியா் அறிவுடைநம்பி, சேவாபாரதி துணைத் தலைவா் சூா்யாராமகிருஷ்ணன், செயலாளா் மும்மூா்த்தி, பொருளாளா் ஸ்ரீராம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். காவல் சிறப்பு உதவி ஆய்வாளா்கள் ஜெயராமன், கோபாலகிருஷ்ணன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கினா். சுமாா் 1850 மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியா்களுக்கு இரண்டாம் கட்டமாக நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது.

இதில் உதவி தலைமை ஆசிரியா்கள் சம்பந்தம், சம்பத்குமாா், வரதராஜன், உடற்கல்வி இயக்குநா் முரளிதரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT