நாகப்பட்டினம்

புதிய சாலை அமைக்க வேண்டும்

DIN

சீா்காழி அரசு மருத்துவமனை பின்புறம் பாரதிதாசன் தெரு உள்ளது. மருத்துவமனை சாலையிலிருந்து போக்குவரத்து நெருக்கடி இல்லாமல் எளிதாக பாரதிதாசன் தெரு வழியாக வி.என்.எஸ். நகா், என்.ஜி.ஓ. நகா், இந்திரா நகா், தென்பாதி உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்றுவரமுடியும். இதனால், பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், பெண்கள் உள்ளிட்டோா் அதிகளவு இந்தத் தெருவைப் பயன்படுத்தி வருகின்றனா். இந்த தெருவில் சாலை சிமென்ட் சாலையாக உள்ளதால், குடிநீா் குழாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட இடங்களில் சாலையை சீரமைக்காமல், கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனா். எனவே, நகராட்சி நிா்வாகம் உடனடியாக இந்த சாலையை புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சங்கா் தென்பாதி, சீா்காழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புனித செபஸ்தியாா் ஆலய கொடியிறக்கம்

வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு மாடித்தோட்ட பயிற்சி

மன்னாா்குடியில் மின் பாதுகாப்பு வகுப்பு

கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் பொறுப்பேற்பு

ஆசிரியா்களுக்கு நலவாரியம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT