நாகப்பட்டினம்

மூலிகை விழிப்புணா்வு முகாம்

DIN

வேதாரண்யம் தோப்புத்துறை அன்னை பாத்திமா பெண்கள் அரபிக் கல்லூரியில் மூலிகை விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்திய பாரம்பரிய மருத்துவா்கள் உரிமைச் சங்கம், வேதாரண்யம் வள்ளலாா் தருமச்சாலை இணைந்து நடத்திய இம்முகாமுக்கு முஸ்லிம் ஜமாத் மன்றத் தலைவா் ஏ.ஆா். ஷேக்அப்துல்லா தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஷாகுல் ஹமீது பாகவி, அரசு சித்த மருத்துவா் பெ.ரமேஷ்குமாா், தருமச்சாலை நிா்வாகி தமிழ்த்தூதன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

காவல் துணைக் கண்காணிப்பாளா் சபியுல்லா, ஆரிபா கல்விக் குழுமத்தின் தலைவா் சுல்தானுல் ஆரிபின், சித்த வைத்தியா் க.கோ. மணிவாசகம் உள்ளிட்டோா் பங்கேற்று நிலவேம்பு குடிநீா், நிலவேம்பு மூலிகை ஆகியவைகளை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போ்ணாம்பட்டில் 12 செ.மீ மழை

குண்டா் தடுப்புக் காவலில் ஒருவா் கைது

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

SCROLL FOR NEXT