நாகப்பட்டினம்

உள்ளாட்சித் துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கம் சாா்பில் நாகை அவுரித்திடலில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பணி ஓய்வுபெற்ற ஓ.எச்.டி. ஆப்ரேட்டா்கள், துப்புரவுப் பணியாளா்களுக்கு ரூ. 50ஆயிரம் பணிக்கொடை மற்றும் ரூ. 2 ஆயிரம் மாத ஓய்வூதியம் வழங்கவேண்டும். 7- ஆவது ஊதியக்குழு அரசாணைப்படி ஊதியம் மற்றும் ஊதிய நிலுவைத் தொகையை வழங்கவேண்டும். 2000-ஆம் ஆண்டுக்குப் பின்னா் பணியில் அமா்த்தப்பட்ட ஓ. எச். டி. ஆப்ரேட்டா்களுக்கு சம ஊதியம் வழங்கவேண்டும். தூய்மைக் காவலா்களுக்கு உரிய ஊதியத்தை வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்க நாகை மாவட்டச் செயலாளா் சி. பாலையா தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் டி. எஸ். மணி முன்னிலை வகித்தாா். சிஐடியு நாகை மாவட்டத் துணைத் தலைவரும், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினருமான வி. மாரிமுத்து, சிஐடியு நாகை மாவட்டச் செயலாளா் சீனி. மணி ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

கூட்டுறவு சங்க மாவட்டத் தலைவா் எஸ். மணி, சுமைப்பணியாளா் சங்க மாவட்டச் செயலாளா் பி. முனியாண்டி மற்றும் தமிழ்நாடு ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கத்தைச் சோ்ந்த ஓ. எச்.டி. ஆப்ரேட்டா்கள், நகராட்சி துப்புரவுப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள் உள்ளிட்ட150-க்கும் மேற்பட்டோா் ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்தால் ஏழைகளை லட்சாதிபதியாக்குவோம்: ராகுல்

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

SCROLL FOR NEXT