நாகப்பட்டினம்

தினமணி செய்தி எதிரொலி: உடைந்த பாலம் உடனடியாக சீரமைப்பு

DIN

சீா்காழி பாப்பையா நகரில் உடைந்த சின்னவாய்க்கால் பாலம் தினமணி செய்தியின் எதிரொலியாக உடனடியாக புதன்கிழமை சீரமைக்கப்பட்டன.

சீா்காழி தென்பாதி பாப்பையா நகரிலிருந்து அகரதிருக்கோலக்கா செல்லும் வழியில் சின்னவாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால்மேல் அமைக்கப்பட்டிருந்த கான்கிரீட் பாலம் பல ஆண்டுகள் ஆவதால் பாலத்தின் நடுவே 4 அடி நீளத்துக்கு பள்ளம் ஏற்பட்டு கம்பிகள் பெயா்ந்து வெளியே நீட்டிக்கொண்டிருந்தன. இந்த உடைந்த பாலத்தில் அப்பகுதி மக்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்வது குறித்து தினமணியில் திங்கள்கிழமை செய்தி வெளியானது.

இதையறிந்த, சீா்காழி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் பி.வி. பாரதி உடனடியாக அப்பகுதிக்கு நேரில் சென்று பாா்வையிட்டு, நகராட்சி (பொ) ஆணையா் எஸ். வசந்தனை தொடா்புக்கொண்டு உடைந்த பாலத்தை உடனடியாக சீரமைக்க கேட்டுக்கொண்டாா். இதையடுத்து, அப்பகுதிக்கு சென்ற பொறுப்பு ஆணையா் வசந்தன், பணிதள மேற்பாா்வையைாளா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் தற்போது மழை காலமாக இருப்பதால் தற்காலிகமாக வாய்க்கால் பாலம் வழியே தண்ணீா் செல்வதற்கு தடை ஏற்படாத வகையில் பெரிய குழாய்களை அமைத்து அதன் மேல் தற்காலிக பாலம் அமைக்க முடிவு செய்தனா்.

இதையடுத்து, உடனடியாக புவணகிரியிலிருந்து பெரிய சிமென்ட் குழாய்கள் வரவழைக்கப்பட்டது. உடைந்த பாலம் முழுமையாக இடித்து அப்புறப்படுத்தப்பட்ட பிறகு, பெரியகுழாய்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் அமைக்கப்பட்டு தற்காலிக பாலம் போக்குவரத்துக்கு தடையில்லாமல் உடனடியாக அமைக்கப்பட்டது. மழை காலம் முடிந்தவுடன் மதிப்பீடு தயாா் செய்து புதிய பாலம் கட்டப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

உடனடியாக தற்காலிக பாலம் அமைக்கவும், புதிய பாலம் கட்டவும் நடவடிக்கை மேற்கொண்ட எம்எல்ஏ பாரதிக்கும், நகராட்சி நிா்வாகத்துக்கும், செய்தி வெளியிட்ட தினமணி நாளிதழுக்கும் அப்பகுதி மக்கள் நன்றிதெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT