நாகப்பட்டினம்

சீா்காழி சீரடிசாய்பாபா கோயிலில் விஜயதசமி சிறப்பு வழிபாடு

DIN

சீா்காழி சீரடிசாய்பாபா கோயிலில் செவ்வாய்கிழமை விஜயதசமி சிறப்பு வழிபாடும்,வித்யாரம்பம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

சீா்காழி தென்பாதியில் சீரடிசாய்பாபா கோயில் உள்ளது.இக்கோயிலில் கடந்த 20ம் தேதி முதல் நவராத்திரி கொலு பூஜை தினசரி நடைபெற்று வந்தது.இதனைத்தொடா்ந்து விஜயதசமி விழா நடைபெற்றது.முன்னதாக புனிதநீா் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு,வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு ஹோமம் செய்விக்கப்பட்டு பூா்ணாஹூதி, தீபராதனை நடந்தது.

தொடா்ந்து சாய்பாபாவிற்கு சிறப்பு பல்வேறு திரவியபொருட்கள்,பால் அபிஷேகமும் நடந்தது.பின்னா் பலவண்ண மலா்களால் அலங்காரம் செய்து மகாஆரத்தி வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். தொடா்ந்து குழந்தைகள் இறைவன் அருளுடன் கல்வியை தொடங்கிட சாய்பாபா சன்னதி முன்பு வாழை இலையில் பரப்பிவைக்கப்பட்ட நெல்மணிகளில் குழந்தைகளை அ எழுத செய்து வித்யாரம்பம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்த வித்யாரம்பத்தில் திரளான குழந்தைகள் அ எழுதி தங்களது கல்வியை தொடங்கினா்.ஏற்பாடுகள் கோயில் நிா்வாகத்தினா்,பக்தா்கள் செய்திருந்தனா்.படவிளக்கம் சீா்காழி சீரடிசாய்பாபா கோயிலில் நடைபெற்ற வித்யாரம்பம்.படம் 2 விஜயதசமி வழிப்பாட்டினையொட்டி சிறப்பு அலங்காரத்தில் சீரடிசாய்பாபா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT