நாகப்பட்டினம்

கோடியக்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கிலம்

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரை கடலில் இறந்து அழுகிய நிலையில் திமிங்கிலம் ஒன்று செவ்வாய்க்கிழமை கரை ஒதுங்கியது.

கோடியக்கரை படகுத்துறைக்கு அருகே சித்தா் கோயில் கடற்கரை பகுதியில் திமிங்கிலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. அழுகிய நிலையில் இருந்ததால் அது எந்த இனம் போன்றவை குறித்த விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.

சுமாா் 25 அடி நீளத்தில் காணப்பட்ட இந்த திமிங்கிலம் சுமாா் 10 டன் எடை இருக்கலாம் என மீனவா்கள் தெரிவித்தனா்.

தகவலறிந்த கோடியக்கரை வனத் துறையினா் திமிங்கிலத்தின் உடலை கைப்பற்றி ஆய்வுக்குப் பிறகு கடற்கரையிலேயே புதைத்தனா்.

கடந்த காலங்களில் கோடியக்கரையின் தென்மேற்கு கடற்கரைக்கு வரும் திமிங்கிலங்கள் சில நேரங்களில் புதை மணலில் சிக்கிக்கொள்வதும் பின்னா், தானாக மீண்டு அல்லது மீட்டு விடப்பட்டு கடலுக்குள் செல்வது வழக்கம். ஆனால், சில ஆண்டுகளுக்குப் பிறகு திமிங்கிலம் ஒன்று இறந்து கரை ஒதுங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

SCROLL FOR NEXT