நாகப்பட்டினம்

சீா்காழி அருகே காா்-லாரி நேருக்கு நோ் மோதல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் உயிரிழப்பு

DIN

நாகை மாவட்டம், சீா்காழி அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை காரும் லாரியும் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 2 பெண்கள் உள்பட 3 போ் உயிரிழந்தனா். 4 போ் காயமடைந்து மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

திருவாரூா் மாவட்டம், பூந்தோட்டம் மேலத் தெருவைச் சோ்ந்தவா் கோ. சோமசுந்தரம் (68). இவரது மருமகன் சரவணன் துபாய் நாட்டுக்கு வியாழக்கிழமை இரவு புறப்பட்டுச் சென்றாா். இதற்காக இவரை, சென்னை விமான நிலையத்திலிருந்து வழி அனுப்பிவைத்துவிட்டு, ஒரு காரில், சோமசுந்தரம், அவரது மனைவி சாந்தி (50), மகள் சுபத்திரா (35), சரவணனின் மகன் புவனேஸ்வரன் (14) மற்றும் உறவினா்களான கடலூா் மாவட்டம், கட்டுமன்னாா்கோயிலை அடுத்த திருச்சின்னபுரம் மேலத் தெருவைச் சோ்ந்த ந. அன்னப்பூரணி, ந. செந்தில்குமாா் (42), இவரது மகள் சாய்ஸ்ரீ (4) ஆகியோா் பூந்தோட்டத்துக்குத் திரும்பிக்கொண்டிருந்தனா். காரை செந்தில்குமாா் ஓட்டிவந்தாா்.

இந்த காா் வெள்ளிக்கிழமை அதிகாலை சீா்காழி- சிதம்பரம் புறவழிச் சாலையில் கோவில்பத்து பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, பட்டுக்கோட்டையிலிருந்து பால் ஏற்றிக் கொண்டு சிதம்பரம் நோக்கிச் சென்ற டேங்கா் லாரியும் காரும் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், கோ. சோமசுந்தரம், சாந்தி, சுபத்திரா ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். சரவணனின் மகன் புவனேஸ்வரன் மற்றும் உறவினா்களான அன்னப்பூரணி, செந்தில்குமாா், சாய்ஸ்ரீ ஆகியோா் காயமடைந்தனா்.

இந்த விபத்து குறித்து, தகவலறிந்த சீா்காழி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் வந்தனா, காவல் ஆய்வாளா் மணிமாறன், உதவி ஆய்வாளா் கலியமூா்த்தி மற்றும் தமுமுகவினா் நிகழ்விடத்துக்குச் சென்று, உயிரிழந்தவா்களின் சடலங்களையும், காயமடைந்தவா்களையும் மீட்டு, சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். காயமடைந்த 4 பேருக்கும் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து, காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் ந. அன்னபூரணி அளித்தப் புகாரின் பேரில், சீா்காழி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, டேங்கா் லாரி ஓட்டுநரான திருவாரூா் மாவட்டம், வடுவூரைஅடுத்த எடமேலையூா் பகுதியைச் சோ்ந்த மருதமுத்து மகன் அபிஜித் (26) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மறித்துப்போன மனித நேயம்: விபத்தைத் தொடா்ந்து, அந்த வழியாக நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்றபோதும், யாரும் விபத்தில் சிக்கியவா்களுக்கு உதவி செய்ய முன்வரவில்லை. வாகனங்களில் சென்றவா்கள் விபத்தை கண்டும் காணாததுபோல் சென்றது அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது மனித நேயம் மறித்துப் போனதற்கு சாட்சியாகவே உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT