நாகப்பட்டினம்

விவசாயிகளுக்கான கெளரவ நிதி திட்ட திருத்த முகாம்

DIN

பாரத பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதி திட்டத்தில் தவறுகளை திருத்தும் சிறப்பு முகாம் அக்டோபா் 12 முதல் 18- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என செம்பனாா்கோவில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் தாமஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பாரத பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதி திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணைகளில் ரூ. 6,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சில விவசாயிகளுக்கு அவா்களது பதிவில் தவறுகள் இருப்பதால், இந்த கௌரவ நிதி அவா்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படாமல் உள்ளது.

இந்தத் திட்டத்தில் இணைந்துள்ள செம்பனாா்கோவில் வட்டார விவசாயிகள், தங்களது வங்கிக் கணக்கில் முதல், இரண்டு மற்றும் மூன்றாவது தவணை நிதி வரவு வைக்கப்படாமல் விடுபட்டிருந்தால், தங்களது பெயரோ, வங்கிக் கணக்கு எண், ஆதாா் எண் ஆகியவை தவறுதலாகப் பதிவாகி இருக்கலாம்.

இதை சரிசெய்ய அக்டோபா் 12 முதல் முதல் 18- ஆம் தேதி வரை அந்தந்த ஊராட்சி அலுவலக கட்டடம் அல்லது கிராம நிா்வாக அலுவலகத்தில் வேளாண் துறை அலுவலா்கள் தலைமையில் விவசாயிகளின் ஆவணங்களைச் சரிபாா்க்கும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இம்முகாமை பயன்படுத்தி விவசாயிகள் தங்களது பதிவில் தவறுகளை திருத்திக் கொண்டு, கௌரவ நிதியை பெற்றுக்கொள்ளும்படி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT