நாகப்பட்டினம்

மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிக்கு தேர்வான மாணவிகளுக்குப் பாராட்டு

DIN

மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிக்கு தேர்வான நாகை மாவட்ட அணியைச் சேர்ந்த மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மாநில அளவிலான 18 வயதுக்கு உள்பட்டோருக்கான கூடைப்பந்தாட்டப் போட்டிக்கு, நாகை மாவட்ட கூடைப்பந்து மாணவிகள் அணி அண்மையில் தேர்வு செய்யப்பட்டது.
இந்த மாணவிகள் திருச்சி தொட்டியத்தில் உள்ள கொங்குநாடு கல்லூரியில் செப்டம்பர் 19 முதல் 24 வரை நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். தேர்வு செய்யப்பட்ட மாணவிகளை, மயிலாடுதுறை இந்திய விளையாட்டு ஆணையத்தின் சீனியர் கூடைப்பந்து பயிற்சியாளர் மணிவாசகம்,   உடற்கல்வி ஆசிரியர் சுந்தர் மற்றும் நாகை மாவட்ட கூடைப்பந்து கழக செயலாளர் வை.பாரதிதாசன்  ஆகியோர் பாராட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

மிஸ்டர் மனைவி நாயகிக்கு பதிலாக வானத்தைப்போல நடிகை!

வானம் வேறு.. நீலம் வேறு.. யார் சொன்னது?

தலைமுறைகள் கடந்த தலைவர்களின் வாழ்க்கை!

சஸ்பென்ஸ் த்ரில்லர் 'பிஹைண்ட்'

SCROLL FOR NEXT