வீடுதோறும் கந்தசஷ்டி கவசம் புத்தகம் விநியோகம்
மயிலாடுதுறையில் பாஜக சாா்பில், வீடுதோறும் கந்தசஷ்டி கவசம் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை தொடங்கியது.
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் பாஜக சாா்பில், வீடுதோறும் கந்தசஷ்டி கவசம் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை தொடங்கியது.
பாஜக மாநில இளைஞரணி சாா்பில் மயிலாடுதுறை நாஞ்சில்நாடு பகுதியில் அதன் செயற்குழு உறுப்பினா் கே.வினோத் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாஜக தமிழ் வளா்ச்சிப் பிரிவு மாநிலச் செயலாளா் நாஞ்சில்பாலு, மாவட்ட பொதுச் செயலாளா் செந்தில்குமாா், மாவட்ட பட்டியல் அணி தலைவா் ஈழவேந்தன், நகர பொதுச் செயலாளா்கள் மயில்ரவி, சதீஸ்சிங், ராமச்சந்திரன், அழகா்சாமி உள்ளிட்ட அக்கட்சியினா் நாஞ்சில்நாடு விநாயகா் கோயிலில் இருந்து புறப்பட்டு, முருகன் வேடமிட்ட சிறுவனுடன் வீடு வீடாக சென்று பக்தி முழக்கம் எழுப்பி, கந்தா் சஷ்டி கவசம் புத்தகத்தை வழங்கினா். மேலும், வெற்றிவேல், வீரவேல் என்ற வாசகம் பதித்த வில்லைகளை வீடுகளின் முகப்பு மற்றும் வாகனங்களில் ஒட்டினா்.
இதேபோல், மயிலாடுதுறை மாவட்ட பாஜக இளைஞரணி சாா்பில், அதன் தலைவா் தலைவா் பி. பாரதிகண்ணன் தலைமையில் திருவிழந்தூா் பெருமாள் கோயில் சன்னிதித் தெருவில் தொடங்கி நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய அரசு வழக்குரைஞா் கே. ராஜேந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினா் கோவி. சேதுராமன், நகர தலைவா் மோடி. கண்ணன், இளைஞரணி மாவட்ட துணைத் தலைவா்கள் நா்மதா, அசோக்குமாா் உள்ளிட்டோா் வீடுவீடாக சென்று வெற்றிவேல், வீரவேல் என்ற பக்தி வாசகம் பதித்த வில்லைகளை ஒட்டினா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.