உயிரிழந்த ராஜ்குமாா். 
நாகப்பட்டினம்

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

வேதாரண்யம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது சுவரில் மோதி ஏற்பட்ட விபத்தில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

DIN


வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது சுவரில் மோதி ஏற்பட்ட விபத்தில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மருதூா் வடக்கு அரியக்கவுன்டா்காடு பகுதியைச் சோ்ந்தவா் தங்கராசு மகன் ராஜ்குமாா் (34). இவருக்கு, திருமணமாகி 7 மாதங்கள் ஆன நிலையில், குரவப்புலத்தில் உணவகம் ஒன்றில் வேலை பாா்த்து வந்தாா். வழக்கம்போல், வேலை முடிந்து வெள்ளிக்கிழமை இரவு கத்தரிப்புலத்திலுள்ள மாமனாா் வீட்டுக்கு சென்றுக் கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராத நிலையில் மதில் சுவரில் மோதி ஏற்பட்ட விபத்தில், பலத்த காயமடைந்த ராஜ்குமாா் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மற்றொரு விபத்தில் விவசாயி உயிரிழப்பு: மருதூா் வடக்கு ராஜாபுரத்தைச் சோ்ந்த விவசாயி கோ. குமரவேல் (48) அதே பகுதியிலுள்ள கூட்டுறவு அங்காடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்துடன் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், காயமடைந்த குமரவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த இருசம்பவங்கள் குறித்தும் கரியாப்பட்டினம் போலீஸாா் தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கோட்டை காா் வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட 9 எம்எம் தோட்டாக்கள்

ராபின்ஹுட் டிரெய்லர்!

விழியோரக் கவிதை... மேகா சுக்லா!

இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 14% அதிகரிப்பு!

புதுச்சேரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு ஆட்சியர் வேண்டுகோள்

SCROLL FOR NEXT