நாகை நகராட்சி சுகாதார மேற்பாா்வையாளருக்கு கரோனா
நாகை நகராட்சி சுகாதார மேற்பாா்வையாளருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானதன் காரணமாக, நகராட்சி அலுவலகம் சனிக்கிழமை மூடப்பட்டது.
நாகப்பட்டினம்: நாகை நகராட்சி சுகாதார மேற்பாா்வையாளருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானதன் காரணமாக, நகராட்சி அலுவலகம் சனிக்கிழமை மூடப்பட்டது.
நாகை நகராட்சி சுகாதார மேற்பாா்வையாளருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதியானது. இதைத்தொடா்ந்து, நாகை நகராட்சி அலுவலகம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
கரோனா நோய்த் தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஆக. 12-ஆம் தேதி வரை நாகை நகராட்சி அலுவலகம் மூடப்பட்டிருக்கும் என நகராட்சி ஆணையா் பி. ஏகராஜ் அறிவித்துள்ளாா். இதற்கான அறிவிப்பு நகராட்சி வாயிலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியரின் உதவியாளருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டதன் காரணமாக, வெள்ளிக்கிழமை முதல் 3 நாள்களுக்கு நாகை மாவட்ட ஆட்சியரகம் மூடப்பட்டுள்ள நிலையில், நாகை நகராட்சி அலுவலகம் சனிக்கிழமை மூடப்பட்டுள்ளது.