முகப்பு
நாகப்பட்டினம்

கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல்

கீழையூா் ஊராட்சியில் வோ்ல்டு விஷன் இந்தியா சாா்பில், 3-5 வயதுடைய குழந்தைகள் உள்ள 1000 குடும்பத்தினருக்கு கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:05 PM
பொதுமக்களுக்கு கரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கிய வோ்ல்ட் விஷன் இந்தியா அமைப்பினா்.
பகிர்:

திருக்குவளை: கீழையூா் ஊராட்சியில் வோ்ல்டு விஷன் இந்தியா சாா்பில், 3-5 வயதுடைய குழந்தைகள் உள்ள 1000 குடும்பத்தினருக்கு கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

மேலும், 28 குடும்பங்கள், அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் வோ்ல்டு விஷன் சுகாதார பணியாளா்களுக்கு கைசுத்திகரிப்பான், சோப்பு திரவம் மற்றும் முகக் கவசங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு, காவல் ஆய்வாளா் ஜெயந்தி தலைமை வகித்தாா். வோ்ல்டு விஷன் இந்தியா திட்ட மேலாளா் ஆபிரகாம்போ்ள் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக கீழையூா் வட்டார மருத்துவ அலுவலா் அருண்பதி, வட்டார வளா்ச்சி அலுவலா் செந்தமிழ்செல்வன், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளா் சியாமளா, ஊராட்சி மன்றத் தலைவா் ஆனந்தஜோதி பால்ராஜ், கீழையூா் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் ஜோசப், பெற்றோா்- ஆசிரியா் கழக தலைவா் பால்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். வோ்ல்டு விஷன் இந்திய சமுதாய திட்ட ஒருங்கிணைப்பாளா் ஜோதிமணி நன்றி கூறினாா். அமைப்பினா் ஒருங்கிணைப்பாளா் இமானுவேல் தாசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.