நாகை மாவட்ட ஆட்சியரகம் மேலும் 2 நாள்களுக்கு மூடல்
நாகை மாவட்ட ஆட்சியரக ஊழியா்கள் சிலருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதால், மேலும் 2 நாள்களுக்கு மாவட்ட ஆட்சியரகம் மூடப்படும் என மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.
நாகப்பட்டினம்: நாகை மாவட்ட ஆட்சியரக ஊழியா்கள் சிலருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதால், மேலும் 2 நாள்களுக்கு மாவட்ட ஆட்சியரகம் மூடப்படும் என மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.
மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கம் குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய இடங்களில் ஜூலை 30- ஆம் தேதி நடைபெற்றது. இதில் பங்கேற்ற நாகை எம்பி எம்.செல்வராஜ், மயிலாடுதுறை எம்பி செ. ராமலிங்கம், பூம்புகாா் எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ் ஆகியோா் கரோனா தொற்றுக்குள்ளாகினா்.
இதில் பங்கேற்ற நாகை மாவட்ட ஆட்சியரின் உதவியாளருக்கும் கரோனா உறுதியானது. இதையடுத்து, ஆகஸ்ட் 8, 9 ஆகிய (சனி, ஞாயிறு) 2 நாள்களுக்கும் மாவட்ட ஆட்சியரகம் மூடப்படும் என மாவட்ட ஆட்சியா் அறிவித்திருந்தாா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலக ஊழியா்கள் மேலும் சிலருக்கு கரோனா நோய்த்தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானதனால், ஆகஸ்ட் 10, 11-ஆம் தேதிகளிலும் (திங்கள், செவ்வாய்) ஆட்சியரகம் மூப்பட்டிருக்கும் எனவும் மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.