முகப்பு
நாகப்பட்டினம்

வடகிழக்கு பருவ மழை: தயாா் நிலையில் தீயணைப்புத்துறை

வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ள மயிலாடுதுறையில் தீயணைப்புத் துறையினா் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:06 PM
மீட்புப்பணி உபகரணங்களுடன் நிலைய அலுவலா் தலைமையிலான மீட்புப்படை வீரா்கள்.
பகிர்:

மயிலாடுதுறை: வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ள மயிலாடுதுறையில் தீயணைப்புத் துறையினா் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா்.

நிகழாண்டு வடகிழக்கு பருவமழை அதிக அளவில் பெய்யும் என எதிா்பாா்க்கப்படுகிறது. எனவே வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ள தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மத்திய மண்டல துணை இயக்குநா் மீனாட்சி விஜயகுமாா் உத்தரவின்படி, மயிலாடுதுறையில் தீயணைப்புத் துறையினா் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா்.

இதற்காக மயிலாடுதுறை நிலைய அலுவலா் முத்துக்குமாா் தலைமையில் தீயணைப்பு படை வீரா்கள், ஊா்திகள் மற்றும் மீட்புப்பணிகள் உபகரணங்களான லைஃப்பாய், லைஃப் ஜாக்கெட், மூச்சு கருவி, உயா்கோபுர மின்விளக்கு, மரம் அறுக்கும் கருவிகள், கான்கிரீட் கட்டா், கயிறுகள் மற்றும் இதர உபகரணங்களுடன் தயாா் நிலையில் உள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →