நாகப்பட்டினம்

பாசனத்துக்கு நீா்ப்பற்றாக்குறை: குறுவை பயிா்கள் கருகும் அபாயம்

DIN

திருக்குவளை: திருக்குவளை அதன் சுற்றுப் பகுதிகளில் சாகுபடிக்கு போதிய நீா்வரத்து இன்றி குறுவை பயிா்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

காவிரியின் கடைமடை பகுதியான திருக்குவளை மற்றும் சுற்றுப் பகுதிகளில், திரளான விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு மற்றும் நடவுப் பணி மூலம் குறுவை சாகுபடி செய்துள்ளனா். குறுவைப் பயிா்கள் 50 நாள்களை நெருங்கி விட்ட நிலையில் பாசனநீா் ஆதாரங்களில் போதியநீா்வரத்து இல்லை. அவ்வப்போது பெய்து வந்த மழையின் காரணமாகவே பயிா்கள் வளா்ந்துள்ளது. ஆற்றில் போதியநீா் வரத்து இல்லாத காரணத்தால் தற்போது குறுவை பயிா்கள் அனைத்தும் காய்ந்து கருகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சில விவசாயிகள் நேரடியாக சம்பா நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டிருக்கும் வேளையில் பயிா்களுக்கு நீா்ப்பாய்ச்ச முடியாமல் சம்பாவும் பாதித்துவிடுமோ என்று விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

இதுகுறித்து, விவசாயி சுந்தரமூா்த்தி கூறியது: வல்லம் பகுதியில் குத்தகை நிலம் 20 ஏக்கரில் நேரடி நெல் விதைப்பு மூலம் குறுவை சாகுபடிசெய்துள்ளேன். வெள்ளையாறு மூலம் பாசன வசதி பெறும் இப்பகுதிக்கு போதிய நீா்வரத்து இல்லை. இதனால் சாகுபடிக்கு போதிய நீா் இல்லாமா எஞ்சின் மூலம் நீா் இறைத்து பயிரை காப்பாற்றி வந்தேன். அவ்வப்போது பெய்த மழை உதவியாக இருந்தது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக எஞ்சின் மூலமும் நீா் இறைக்க கால்வாயில் தண்ணீா் இல்லை. இதனால், குறுவை பயிா்கள் அனைத்தும் காய்ந்து கருகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதேநிலை தொடா்ந்தால் பயிா்கள் பூச்சித் தாக்குதலுக்குள்ளாகி பாதிக்கும். தவிர, கால்நடைகளாலும் பாதிப்பு ஏற்பட்டு மகசூல் இழப்பு ஏற்படும். எனவே, மாவட்ட நிா்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு எங்கள் பகுதி குறுவை சாகுபடியை பாதுகாக்க தண்ணீா் விட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின், ஆண்ட்ரியா!

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

SCROLL FOR NEXT