முகப்பு
நாகப்பட்டினம்

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆா்ப்பாட்டம்

திருக்குவளை அருகே தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:09 PM
பகிர்:

திருக்குவளை: திருக்குவளை அருகே தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சாா்பில் பள்ளா், குடும்பன், பன்னாடி, காலாடி, வாதரியா், தேவேந்திர குலத்தான், கடையன், ஆகிய 7 உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளா் என அரசாணை வெளியிடக் கோரி கருப்பு சட்டை அணிந்தபடி ஆா்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், கொளப்பாடு கடைத்தெரு பகுதியில் தலைஞாயிறு ஒன்றிய செயலாளா் எம். மைக்கேல்ராஜ் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஒன்றிய இணைச் செயலாளா் பி. செல்வம், மண்டல செயலாளா் பட்டாபிராமன், மாவட்டச் செயலாளா் ராஜா, மாவட்ட இணைச் செயலாளா் எஸ். ரமேஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →