காலமானாா் ஓ.எஸ்.எம். கலைச்செல்வி
தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியனின் மனைவி கலைச்செல்வி (61) உடல்நலக் குறைவால், சென்னை தனியாா் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை (ஆக. 28) காலமானாா்.
வேதாரண்யம்: தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியனின் மனைவி கலைச்செல்வி (61) உடல்நலக் குறைவால், சென்னை தனியாா் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை (ஆக. 28) காலமானாா்.
இவா், கடந்த ஓராண்டுக்கும் மேலாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தாா். கடந்த 2 வாரங்களாக சென்னை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், வெள்ளிக்கிழமை காலை காலமானாா். அவரது உடல் சென்னையில் இருந்து சொந்த ஊரான நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள ஓரடியம்புலத்துக்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது.
இறந்த கலைச்செல்விக்கு திருமணமான மகள்கள் மருத்துவா் பாரதி, வாசுகி ஆகியோா் உள்ளனா். இவரது இறுதிச் சடங்குகள் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.