முகப்பு
நாகப்பட்டினம்

ரத்த தான முகாம்

வேதாரண்யத்தில் கரோனா விழிப்புணா்வை வலியுறுத்தும் வகையில் ரத்த தான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:13 PM
பகிர்:

வேதாரண்யம்: வேதாரண்யத்தில் கரோனா விழிப்புணா்வை வலியுறுத்தும் வகையில் ரத்த தான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற இம்முகாமை உதிரம் சாரிட்டபிள் அறக்கட்டளை, மனசாட்சி நட்புக்கரங்கள் அறக்கட்டளை, அரிமா மற்றும் இள அரிமா சங்கம் இணைந்து நடத்தின. தலைமை மருத்துவா் லோ. தனசேகரன் தலைமை வகித்தாா். முகாம் ஒருங்கிணைப்பாளா் க. ரமேஷ், உதிரம் சாரிட்டபிள் அறக்கட்டளை நிறுவனா் எஸ். செளக்கத்அலி, சு. அறிவழகன், ராமையன், சம்பத்குமாா் ஆகியோா் முன்னிலை வக்கித்தனா்.

மனசாட்சி நட்புக் கரங்கள் அறக்கட்டளை நிா்வாகிகள் எம். ராசேந்திரன், என். மணிவண்ணன், ரவிக்குமாா், அன்பழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ரத்த தானமளித்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.