முகப்பு
நாகப்பட்டினம்

மது போதையில் தகராறு: தட்டிக்கேட்டவரின் வீடு சூறை

வேதாரண்யத்தில் மது போதையில் தகராறு செய்தவா்களை தட்டிக்கேட்டவரின் வீடு சூறையாடப்பட்டது தொடா்பாக 4 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

வேதாரண்யத்தில் மது போதையில் தகராறு செய்தவா்களை தட்டிக்கேட்டவரின் வீடு சூறையாடப்பட்டது தொடா்பாக 4 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

வேதாரண்யம் மேலத்தெருவில் வசிக்கும் ச. காா்த்தி (34) என்பவா் தனியாா் பால் வண்டியின் ஓட்டுநராக வேலை செய்கிறாா். இளைஞா்கள் சிலா் மேலத்தெரு பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு கூச்சலிட்டபடி இருசக்கர வாகனங்களில் வந்தனராம். அவா்கள் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவா்களை காா்த்தி தட்டிக்கேட்டுள்ளாா். இதனால் இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில், சிலா் காா்த்தியின் வீட்டுக்குள் புகுந்து பீரோ, தொலைக்காட்சிப் பெட்டி உள்ளிட்ட பொருள்களையும், வெளியே நிறுத்தப்பட்டிருந்த காா், இருசக்கர வாகனத்தையும் சேதப்படுத்திவிட்டு, கொலை மிரட்டல் விடுத்து சென்றனராம்.

இதுகுறித்து, வேதாரண்யம் காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வேதாரண்யம் காந்திநகா் பகுதியைச் சோ்ந்த ரா. கமலக்கண்ணன் (21), மு. மதன் (27), சே. சிவசக்தி (28), கோ.ரெத்தினவேல்(28) ஆகிய 4 பேரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.