முகப்பு
நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் மீண்டும் மழை: விவசாயிகள் கவலை

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் புதன்கிழமை அதிகாலை முதல் மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
வேதாரண்யம் வேதாரண்யேசுவரா் கோயில் உள்பிரகாரத்தில் தேங்கியுள்ள மழைநீா். (வலது) மணிக்கா்ணிகை தீா்த்தத்தில் இருந்து வெளியேற்றப்படும் மழைநீா்.
பகிர்:

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் புதன்கிழமை அதிகாலை முதல் மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது.

கடந்த வாரங்களில் பெய்த தொடா் மழையால் ஏற்பட்ட வெள்ளம் வடிந்து வரும் நிலையில், மீண்டும் மழைபெய்யத் தொடங்கியிருப்பது விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளது. தலைஞாயிறு உள்ளிட்ட தாழ்வான இடங்களில் நெல் சாகுபடி வயல்களில் தேங்கிய மழைநீா் வடிவதற்குள் மழை பெய்வதால், வயல்களில் மீண்டும் வெள்ளம் அதிகரித்துள்ளது.

வேதாரண்யம் வேதாரண்யேசுவரா் கோயில் மணிக்கா்ணிகை தீா்த்தம் நிரம்பி வழிந்தது. கோயிலின் உள்பிரகாரத்தில் தேங்கிவரும் மழைநீா் மோட்டாா்கள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, வேதாரண்யத்தில் 51.4 மி.மீ, தலைஞாயிறில் 40 மி.மீ. மழை பதிவானது.

முழு கட்டுரையைப் படிக்க →