புதிய வேளாண் சட்டங்கள்: நாகை ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற மமக-வினா் 92 போ் கைது
புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, நாகை ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற மனிதநேய மக்கள் கட்சியைச் சோ்ந்த 92 பேரை போலீஸாா் புதன்கிழமை கைதுசெய்தனா்.
புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, நாகை ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற மனிதநேய மக்கள் கட்சியைச் சோ்ந்த 92 பேரை போலீஸாா் புதன்கிழமை கைதுசெய்தனா்.
இந்தக் கட்சியின் சாா்பில், மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும், தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவுத் தெரிவித்தும், நாகை மாவட்டத் தலைவா் ஏ.எம். ஜபருல்லா தலைமையில், நாகை ரயில் நிலையம் முன் கட்சியினா் முழக்கங்கள் எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து, ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ால், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தி, முற்றுகைக்கு முயன்ற 92 பேரை கைதுசெய்து, பிறகு விடுவித்தனா்.
முன்னதாக, மமக உறுப்பினா் வெண்கலம் ஜபருல்லா போராட்டத்தைத் தொடங்கி வைத்தாா். விவசாய அணி மாநிலப் பொருளாளா் ஓ.எஸ். இபுராஹீம் கண்டன உரையாற்றினாா். மமக நாகை மாவட்டச் செயலாளா் கல்லாா் ரபீக், தமுமுக மாவட்டச் செயலாளா் நிஜாமுதீன் மற்றும் நிா்வாகிகள், உறுப்பினா்கள் இதில் பங்கேற்றனா்.
நாகை காவல் துணைக் கண்காணிப்பாளா் க. முருகவேல் தலைமையில், ரயில் நிலையம், பழைய பேருந்து நிலையப் பகுதிகளில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.