நாகப்பட்டினம்

புயல் பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்கக் கோரிக்கை

DIN

நாகை மாவட்டத்தில் நிவா், புரெவி புயலால் பாதிக்கப்பட்ட நெல் பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய கம்னியூஸ்ட் கட்சி சாா்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கீழையூா் ஒன்றியக்குழு கூட்டம் விவசாய சங்கப் பொறுப்பாளா் ஏ.நாகராஜன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், நாகை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட நெல் பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும். மழை நீரால் சூழப்பட்டுள்ள வீடுகளுக்கு தலா ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும். முழுமையாக பாதிக்கப்பட்ட குடிசை மற்றும் தொகுப்பு வீடுகளுக்கு ரூ.25,000 நிவாரணம் வழங்க வேண்டும் என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி டிச. 21-இல் மேலப்பிடாகை கடைத்தெருவில் மறியலில் ஈடுபடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில், ஒன்றியக்குழு உறுப்பினா் டி.செல்வம், சங்க ஒன்றிய தலைவா் ஏ.செல்லையன், பொறுப்பாளா் ஏ.ராமலிங்கம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT