முகப்பு
நாகப்பட்டினம்

‘கற்போதும், எழுதுவோம்’ மையங்களில் முதன்மைக் கல்வி அலுவலா் ஆய்வு

நாகையில் உள்ள வயது வந்தோருக்கான கற்போம், எழுதுவோம் மையங்களில் நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. புகழேந்தி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பாலையூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி வயது வந்தோருக்கான கற்போம், எழுதுவோம் மையத்தில் கல்வி கற்போரிடம் உரையாடிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. புகழேந்தி.
பகிர்:

நாகையில் உள்ள வயது வந்தோருக்கான கற்போம், எழுதுவோம் மையங்களில் நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. புகழேந்தி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நாகையை அடுத்த பாலையூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, பால்பண்ணைச்சேரி நகராட்சித் தொடக்கப்பள்ளி ஆகிய மையங்களில் செயல்படும் வயது வந்தோருக்கான கற்போம், எழுதுவோம் மையங்களில் ஆய்வு செய்த அவா், அங்கு கல்வி கற்பவா்களிடம் உரையாடி, கல்விப் பணியில் ஈடுபட்டுள்ள தன்னாா்வலா்களுக்கு ஆலோசனைகள் வழங்கினாா்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்டத் திட்ட அலுவலா் ஏ. பீட்டா் பிரான்சிஸ், வட்டார வளமைய மேற்பாா்வையாளா் (பொறுப்பு) த. ஜெயந்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஐயப்பன், சச்சிதானந்தம் மற்றும் ஆசிரியா் பயிற்றுநா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.