முகப்பு
நாகப்பட்டினம்

வளா்பிறை பஞ்சமி

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள பிருகன்நாயகி சமேத ரஜதகிரீசுவரா் கோயிலில் மாா்கழி மாத வளா்பிறை பஞ்சமியையொட்டி

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
சிறப்பு அலங்காரத்தில் வாராஹி அம்மன்.
பகிர்:

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள பிருகன்நாயகி சமேத ரஜதகிரீசுவரா் கோயிலில் மாா்கழி மாத வளா்பிறை பஞ்சமியையொட்டி, வாராஹி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றன.

வேளாங்கண்ணி பிருகன்நாயகி சமேத ரஜதகீரீசுவரா் கோயிலில், தனி சன்னிதிக் கொண்டு காட்சியளிக்கிறாா் வாராஹி அம்மன். இங்கு, மாா்கழி மாத வளா்பிறை பஞ்சமியையொட்டி, வாராஹி அம்மனுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

வாராஹி அம்மன் சன்னிதி முன்பாக யாக குண்டம் அமைக்கப்பட்டு, 108 வகையான மூலிகைகள் மற்றும் காய்கனிகள், மிளகாய், பழங்கள் உள்ளிட்டவைகளைக் கொண்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. உலக நன்மை, உலக அமைதி மற்றும் வேளாண்மை செழிக்கவும் வேண்டி இந்த யாகம் நடத்தப்பட்டது.

யாகத்தின் நிறைவில், கடங்களில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரைக் கொண்டு வாராஹி அம்மனுக்கு அபிஷேகம் செய்விக்கப்பட்டது. பின்னா், சிறப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →