கடற்கரையில் ஒதுங்கிய அடையாளம் தெரியாத சடலம்
வேதாரண்யம் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் அழுகிய நிலையில் கரை ஒதுங்கியது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
வேதாரண்யம் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் அழுகிய நிலையில் கரை ஒதுங்கியது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
அகஸ்தியம்பள்ளி- மணியன்தீவு கடற்கரை பகுதியில் எலும்புகள் தெரியும் அளவில் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒதுங்கியுள்ளது. அவா், யாா், எந்த ஊரை சோ்ந்தவா்கள் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. இந்நிலையில், இதுகுறித்து, வேதாரண்யம் கடலோர காவல் நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.