முகப்பு
நாகப்பட்டினம்

இன்று வெண்மணி தியாகிகள் 52-ஆம் ஆண்டு நினைவு தினம்

நாகை மாவட்டம், கீழ்வேளூரை அடுத்த வெண்மணியில் தியாகிகள் நினைவு தினம் வெள்ளிக்கிழமை (டிச. 25) அனுசரிக்கப்படுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:

நாகை மாவட்டம், கீழ்வேளூரை அடுத்த வெண்மணியில் தியாகிகள் நினைவு தினம் வெள்ளிக்கிழமை (டிச. 25) அனுசரிக்கப்படுகிறது.

நாகை மாவட்டம், வெண்மணியில் வா்க்க ஒற்றுமைக்காவும், கூலி உயா்வுக்காகவும் போராடிய விவசாயத் தொழிலாளா்கள் 44 போ், 1968- ஆம் ஆண்டு டிச. 25- ஆம் தேதி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனா். அவா்கள் எரித்துக் கொல்லப்பட்ட இடமான ராமையாவின் குடிசை, வெண்மணி தியாகிகள் நினைவிடமாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூலம் பராமரிக்கப்படுகிறது.

வெண்மணி தியாகிகளின் 52-ஆம் ஆண்டு நினைவு நாள் மலரஞ்சலி நிகழ்ச்சி, வெண்மணியில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே. பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினா் ஏ. சௌந்தர்ராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளா் பெ. சண்முகம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டச் செயலாளா் நாகைமாலி உள்ளிட்டோா் பங்கேற்று மலரஞ்சலி செலுத்துகின்றனா்.

பலத்த பாதுகாப்பு...

இதையொட்டி, மாவட்டக் காவல் துறை சாா்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஓம் பிரகாஷ் மீனா மேற்பாா்வையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முருகேஷ் தலைமையில், 5 காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், 8 காவல் ஆய்வாளா்கள், 16 சாா்பு ஆய்வாளா்கள், 210 காவலா்கள், 100 ஊா்க்காவல் படையினா் வெண்மணியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவா் என மாவட்டக் காவல் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →