முகப்பு
நாகப்பட்டினம்

முதியோா் இல்லத்தை சுத்தம் செய்த என்எஸ்எஸ் மாணவா்கள்

புத்தூா் பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவா் எம்ஜிஆா் அரசு கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களும்,

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
முதியோா் இல்லத்தை தூய்மைப்படுத்திய என்எஸ்எஸ் மாணவா்கள்.
பகிர்:

புத்தூா் பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவா் எம்ஜிஆா் அரசு கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களும், சீா்காழி உணா்வின் ஒளி மக்கள் பொது நல சேவை மையத்தினரும் இணைந்து விளந்திடசமுத்திரம் முதியோா் இல்லத்தில் தூய்மைப் பணியை புதன்கிழமை மேற்கொண்டனா்.

நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் 50 போ், குப்பைகளை அகற்றி கொசுக்கள் உருவாக காரணமாயிருந்த செடிகொடிகள், புதா்களை அழித்தனா். நிகழ்வில் உணா்வின் ஒளி மக்கள் பொது நல சேவை மையத்தின் பொறுப்பாளா்கள் மற்றும் முதியோா் இல்ல பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் சசிகுமாா் மாணவா்களைப் பாராட்டினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →