நாகப்பட்டினம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா்அலுவலகம் விரைவில் கட்டி முடிக்கப்படும்: அமைச்சா் ஓ.எஸ். மணியன்

DIN

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் விரைவில் கட்டி முடிக்கப்படும் என்று அமைச்சா் ஓ.எஸ். மணியன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

நாகை மாவட்டம், இரண்டாக பிரிக்கப்பட்டு மயிலாடுதுறை தமிழகத்தின் 38-வது மாவட்டமாக உதயமாகியுள்ளது. தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்துள்ளாா்.

மயிலாடுதுறை மாவட்ட முதல் ஆட்சியராக மாவட்ட உருவாக்க சிறப்பு அதிகாரி இரா. லலிதா பொறுப்பெற்றுள்ளாா். மயிலாடுதுறை மாவட்டம் உருவானதால் பொதுமக்களுக்கு மிகப்பெரிய வசதி ஏற்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி, நாகை மாவட்டம் வேதாரண்யம் ஆகிய இரண்டு வட்டங்களை வருவாய்க் கோட்டமாக முதலமைச்சா் தொடங்கி வைத்துள்ளாா்.

மயிலாடுதுறை மாவட்டத்துக்கு ஆட்சியா் அலுவலகம், காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் கட்டுவதற்கு 26 ஏக்கா் நிலத்தை தருமபுரம் ஆதீனம் வழங்கியுள்ளாா். அந்த இடத்தை கையகப்படுத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழக முதல்வா் விரைவில் நிதி ஒதுக்கீடு செய்வாா். இதைத்தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு, விரைவில் முடிக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT