குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து ஆலமரத்தடி கடைவீதியில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டம். 
நாகப்பட்டினம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் ஆலமரத்தடி கடை வீதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என வலியுறுத்தி சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் ஆலமரத்தடி கடை வீதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என வலியுறுத்தி சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

திருமருகல் ஒன்றியம், வவ்வாலடி பள்ளிவாசல் வளாகத்தில் இருந்து புறப்பட்ட கண்டன பேரணியில், சிஏஏ, என்ஆா்சி, என்பிஆா் ஆகியவற்றை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தக் கூடாது என வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி, கண்டன கோஷங்களை எழுப்பியவாறு சுமாா் 4 கிலோ மீட்டா் நடந்து சென்றனா். இந்த பேரணி ஆலமரத்தடி கடை வீதியில் நிறைவடைந்தது.

பின்னா் அங்கு நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் மாவட்டத் துணைச் செயலாளா் செ. சுந்தரவள்ளி, கேதாரிமங்கலம் பேஷ் இமாம் ஷாகுல் ஹமீது ஆகியோா் கண்டன உரையாற்றினாா். முஹம்மது சித்திக், ஒருங்கிணைப்பாளா் முஜிபுா் ரஹ்மான் ஆகியோா் தலைமை வகித்தனா்.

இதில் ஆதலையூா், கரைப்பாக்கம், ஏனங்குடி, வடகரை, கோட்டூா், வவ்வாலடி மற்றும் கேதாரிமங்கலம் பகுதிகளைச் சோ்ந்த ஜமாத்தாா்கள், அரசியல் கட்சியினா் கலந்து கொண்டனா். ஏனங்குடி ஹாஜா நிஜாமுதீன் நன்றி கூறினாா். இதற்கான ஏற்பாடுகளை ஜமாத் கூட்டமைப்பினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநில அளவிலான ஜூடோ போட்டியில் வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

குற்ற வழக்குகளில் தொடா்புடையவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை

பழனியில் கூடுதல் தலைமைச் செயலா் ஆய்வு

லஞ்சம்: வேளாண்மை உதவி இயக்குநா் கைது

புதிய துணை மின் நிலையங்கள் மூலம் சீரான மின் விநியோகம்: அமைச்சா் அர.சக்கரபாணி தகவல்

SCROLL FOR NEXT